சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவு கணக்கை ஜூன் 3க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், செலவு கணக்கு தாக்கல் கட்டாயம் என்றும், ஜூன் 3 இறுதி நாள் என்றும் கமிஷன் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

செய்தி குறிப்பின்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஏற்கனவே செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

காலக்கெடுவுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பப்படும். அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அடுத்த 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தடை விதிக்கப்படலாம்.