சென்னை: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டு நினைவு கூர்ந்தார்.

அந்த பதிவில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் உள்ளிட்ட துறைகளில் கருணாநிதி ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பிறந்தநாள் நாளில் மரியாதை கலந்த வணக்கங்களையும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இதனிடையே, அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.