புதுடில்லி: முன்னாள் தமிழக பாஜ தலைவர் கே. அண்ணாமலை இன்று (ஜூன் 4) டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இன்று அவரது பிறந்த நாளும் ஆகும்.

சென்னையிலிருந்து திடீர் பயணமாக டில்லி சென்ற அண்ணாமலை, கடந்த சில நாட்களாக அங்கு முகாமிட்டு பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். தனது முடிவு குறித்து பாஜ பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷை சந்தித்து ஆலோசித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து கட்சியிலிருந்து விலக உள்ள தகவலை தெரிவித்து, அதுதொடர்பான கடிதத்தையும் வழங்கியதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, பாஜவை விட்டு விலகுவது மற்றும் புதிய அமைப்பு தொடங்குவது குறித்து எடுத்துக் கூறி, அவரது ஆசியையும் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை நாளை தமிழகம் திரும்ப உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய கட்சி தொடக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.