கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளிகள் ஜூன் 4 அன்று திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கியது.

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பூங்கொத்து வழங்கி, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், புதிய நம்பிக்கையுடன் கல்வியாண்டின் முதல் நாளை தொடங்கும் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். கல்வி தான் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி என்றும் அவர் கூறினார்.

மேலும், உயரிய கனவுகளை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப கடினமாக உழைக்க வேண்டும் என்றும், பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் முன்னேற்றமாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மகிழ்ச்சியாக கற்றுக் கொண்டால் வெற்றி தானாகவே தேடி வரும் எனவும் தெரிவித்தார்.