இலங்கையில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 7 பேர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் அங்குருவடோட்டாவில் செயல்படும் முதியோர் இல்லத்தில் புதன்கிழமை திடீரென தீப்பற்றியது.

சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் போலீசார் கூறினர்.

காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.