சென்னை: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டர் எல்லைக்குள் அமைந்துள்ள 717 மது கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய் மே 12 அன்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் கடைகளை மூடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், தூரத்தை துல்லியமாக அளவிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று வரை 620 கடைகள் மட்டுமே மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் டாஸ்மாக் உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு, மூடப்படாமல் உள்ள கடைகளை நாளைக்குள் மூடி, அதனை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.





