ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பயணத்தின் போது இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து, குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முன்பே தெரிவித்திருந்தது.
மேலும் மருந்துத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேசப்படவுள்ளதாக கூறப்பட்டது.
பிரதமருடன் நடந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர்.





