கொல்கத்தா: முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500 இலிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தும் புதிய நலத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
முன்னதாக திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் ‘லட்சுமிர் பந்தர்’ என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது. பழங்குடியின பெண்களுக்கு ரூ.1,700 வழங்கப்பட்டது.
தேர்தல் பிரசாரத்தின் போது மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், ‘லட்சுமிர் பந்தர்’ திட்டத்திற்கு மாற்றாக ‘அன்னபூர்ணா பந்தர்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்றது. முதல் கட்டமாக 28.5 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.3,000 நேரடியாக செலுத்தப்பட்டது.
அடுத்த மூன்று மாதங்களில் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.





