இந்தியா வலிமைமிக்க நாடாக மாறுவதைத் தடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன என்றும், அதற்காக நாட்டின் கலாசார விழுமியங்களை பாதித்து பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா இப்போது மறுமலர்ச்சியை நோக்கி பயணித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் இருப்பதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், சமூகத்தில் பிரிவினையை உருவாக்க நினைக்கும் சிலரும் இருப்பதாகவும், சிறிய விஷயங்களை காரணமாக்கி அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த மதிப்புகளும் மரபுகளும் வலுப்பெற்றால் உலக அரங்கில் இந்தியாவின் நிலை உயரும் என்பதை உணர்ந்து, சில சக்திகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றை பலவீனப்படுத்த முயல்கின்றன என்றும் அவர் கூறினார்.
சமூகம் தனது அடையாளம் மற்றும் நோக்கம் குறித்து தெளிவுடன், நாட்டின் மற்றும் உலகத்தின் நலனுக்காகச் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் பகவத் வலியுறுத்தினார்.





