சென்னை: தமக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறி, அதை வாபஸ் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தகவலின்படி, பாஜவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி, புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் “இது நம்ம இயக்கம்” என்ற பெயரில் அவர் தொடங்கிய இயக்கத்தில் பெருமளவு மக்கள் இணைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத் தலைவராக இருந்த காலத்தில், மத்திய அரசின் துப்பாக்கி ஏந்திய இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது பாஜவிலிருந்து விலகியுள்ள நிலையில், இந்த உயர்தர பாதுகாப்பு தமக்கு அவசியமில்லை என அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இசட் பிளஸ் பாதுகாப்பை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு அவர் கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலித்த பின், மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் பாதுகாப்பை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.