பீஹார் மாநிலத்தில் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பாதிக்கும் பிளம்பர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.294 கோடி வரவு காட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

கயா ஜி மாவட்டத்தில் புத்தகயா அருகே உள்ள மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் குழாய் பழுது பார்க்கும் தொழிலாளி. அவரது கணக்கில் முன்பு ரூ.113 மட்டுமே இருப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

புகாரின்படி, முதலில் ரூ.94 கோடி வரவு காட்டப்பட்ட நிலையில், அதே மாலையில் இருப்புத் தொகை ரூ.294 கோடியாக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் தகவல் அளித்தார்.

இந்த வரவு வங்கி தவறால் ஏற்பட்டதா, தொழில்நுட்ப கோளாறா அல்லது மோசடி கும்பலின் செயலா என்பதைக் கண்டறிய விசாரணை நடக்கிறது. தொடர்புடைய மற்ற கணக்குகள், பணப்பரிமாற்ற அடையாள எண்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.