அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அணித் தேர்வு மும்பையில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அயர்லாந்தில் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன் பின்னர் இங்கிலாந்தில் ஜூலை 1, 4, 7, 9, 11 ஆகிய தேதிகளில் ஐந்து டி20 போட்டிகள், தொடர்ந்து ஜூலை 14, 16, 19 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அணித் தேர்வில் முக்கிய கவனத்தை பெற்றது 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் சேர்க்கை. இந்திய அணிக்குத் தேர்வான மிக இளம் வீரர் என்ற சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்; 16 வயதில் இந்திய அணியில் இடம் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ்.
இதற்கிடையில், ஜப்பானில் செப். 19 முதல் அக். 4 வரை நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலிலும் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்.





