வாஷிங்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று அளித்த பேட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் நல்ல நண்பர் என்றும் டிரம்ப் கூறினார். மோடியுடன் உள்ள நட்புறவே இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உந்துசக்தியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுடன் உள்ள பொருளாதார உறவுகளால் அமெரிக்கா தற்போது அதிக பலன் அடைந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளில் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் பொருளாதார ஒத்துழைப்பையும் சந்தை அணுகலையும் கணிசமாக விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.