லக்னோ: மத்தியில் பாஜ அரசு அமைந்த பிறகு சர்வதேச நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் விழிப்புணர்வு கொண்ட மக்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், பாஜ ஆட்சி வந்த பின்னர் இந்தியாவின் உலகளாவிய நிலைமையில் ஏற்பட்ட மாற்றத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன் இருந்த இந்தியா இப்போது இல்லை; அந்த மாற்றத்தை மக்கள் உணர்ந்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 8–9 ஆண்டுகளில் மத்திய பாஜ தலைமையிலான அரசு 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதாக அவர் கூறினார். இன்று இந்தியா அதிக தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவற்றை தாம் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுவதாகவும் அமைச்சர் கூறினார்.