நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் ஆர். பிரக்ஞானந்தா, ஞாயிற்றுக்கிழமை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியால், நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
சந்திப்பின்போது, தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட போர்டில் இருவரும் ஆட்டம் ஆடியதாக கூறப்பட்டது.
தொடர்ந்து, அவரது சாதனையை பாராட்டி முதல்வர் விஜய் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, முதல்வர் தாமே போர்டை எடுத்து வரச் சொல்லி ஆர்வத்துடன் விளையாடினார் என்றும், அவர் நன்றாக விளையாடினார் என்றும் தெரிவித்தார்.





