ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற அனுமதி பெற சட்டப்பூர்வமான வழிகளில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, ஜனநாயக முறையில் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாக வெளியான கருத்துகளை சுட்டிக்காட்டிய அவர், கடந்த தி.மு.க. அரசு பின்பற்றிய அணுகுமுறையே தொடரும் என்ற நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்பாகும் என குற்றம்சாட்டினார்.

முருக பக்தர்களுக்கு எதிராக அடக்குமுறை நடந்ததாகவும், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் அங்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியிலும் அதே அணுகுமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரின் கருத்து பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறிய அர்ஜுன் சம்பத், இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கிடைக்க சட்ட வழிகளிலும் ஜனநாயக முறையிலும் போராட்டம் தொடரும் என வலியுறுத்தினார்.