இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை மாதத்திற்குள் இறுதியாகும் என வர்த்தக அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து பேசிய அவர், ஜூலை இறுதிக்குள் முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும், ஒப்பந்தத்தின் முதல் கட்டம் ஜூலை தொடக்கத்திலேயே கையெழுத்தாகும் வாய்ப்பும் இருப்பதாக கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர வர்த்தக ஒப்பந்தம் உருவாகும் முன், இந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரக்கூடும் என அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக அண்மையில் டில்லியில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருப்பதாக அமைச்சர் கூறி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் செயல்முறை முன்னேறி வருவதாக சுட்டிக்காட்டினார்.