காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே உள்ள ஸ்ரீசக்கரா நகர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை உயர் மின்னழுத்த மின் கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில், பள்ளி அருகாமையில் மின் கம்பி விழுந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
அப்பகுதி மக்கள், மின் கம்பி அறுந்து விழுந்த தகவலை உடனடியாக மின்வாரியத்திற்கு தெரிவிக்க முயன்றதாக கூறினர்.
ஆனால், தகவல் தெரிவித்தும் மின் கம்பியை உடனடியாக அகற்றவில்லை எனவும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இது அலட்சியம் எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.




