ஆட்சி கலைந்தால் தேர்தலை சந்திக்க தவெக தயாராக இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். இதே நேரத்தில், திமுகவும் தேர்தலுக்கு தயாரா என அவர் சவால் விடுத்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆட்சி 6 மாதத்திற்குள் கலைந்துவிடும்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்தார். அப்படி நடந்தால் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால், அத்தகைய சூழல் ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும், அரசு முழு 5 ஆண்டுகள் தொடரும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தினார்.

மேலும் தேர்தல் செலவினங்களை குறிப்பிட்டு, தங்களிடம் பணபலமில்லை என அவர் கூறினார். தங்கள் தரப்பில் 5 லட்சம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் போன்ற தொகைகளை செலவழித்து அமைச்சராகியதாகவும், திமுக எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறி, அந்த நம்பிக்கையுடன் திமுக தேர்தலை சந்திக்குமா என கேள்வி எழுப்பினார்.