சென்னை: வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியின் சில நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக, கட்சி ஆய்வுக் குழு சேகரித்த கருத்துகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, காரணங்களை கண்டறிய தொகுதி வாரியாக கள ஆய்வு செய்யும் வகையில் கட்சி தலைமை ஒரு குழுவை அமைத்தது.

அந்த குழு மாவட்டங்கள் தோறும் சென்று, தேர்தல் பணிகள் தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தது.

குழுவிடம் பேசிய பல நிர்வாகிகள், சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தெரிவித்தனர். இதனால், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.