மும்பை: இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவுவதற்கான பரிந்துரையை இஸ்ரேல் அரசுக்கு அனுப்பியுள்ளதாக, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரி தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தூதரக அதிகாரி யானிவ் ரெவச், இந்தியாவில் சிவாஜிக்கு உள்ள செல்வாக்கும் அவரது முக்கியத்துவமும் புரிகிறது என்றும், இது வழக்கமான திட்டமல்ல; நீண்டகால திட்டமாக முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த முயற்சியின் மூலம் இந்திய மக்கள் மற்றும் இஸ்ரேல் மக்கள் இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்றும், சிவாஜி சிலை இஸ்ரேலின் பெரிய நகரம் ஒன்றில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சிவாஜி குறித்த தகவல்களை மகாராஷ்டிர முதல்வர் தேவந்திர பட்னாவிஸிடம் கேட்டதாகவும், உடனடியாக வழங்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் யானிவ் ரெவச் கூறினார்.





