சென்னை: அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்று சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், 21 எம்எல்ஏக்கள் சார்பில் மன்னிப்பு கடிதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இபிஎஸ் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

அதே நேரத்தில், கட்சியின் கொறடா உத்தரவை மீறியதாக கூறி, ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், அந்த நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் நடவடிக்கையிலிருந்து தப்பினர். சபாநாயகர் அறிவிப்பின்படி, ராஜினாமா செய்து பின்னர் தவெகவில் இணைந்த சத்ய பாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.