தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூன் 9 அன்று திருநெல்வேலி, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 10 அன்று திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 11 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ஜூன் 12 அன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





