ரூ.451 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை (ED) பறிமுதல் செய்ததை எதிர்த்து, லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ், மகள் டெய்ஸி ஆதவ் மற்றும் மகன் சார்லஸுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை எதிர்த்தே தற்போது இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





