இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வைத்திருந்த சாதனையை முறியடித்து, நாட்டின் நீண்டகாலத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இன்று புதிய மைல்கல்லை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி 2014 மே 26 அன்று பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் தொடர்ந்து பதவியில் நீடித்து வரும் நிலையில், ஜூன் 10, 2026 நிலவரப்படி அவர் 4,399 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நேருவின் 4,398 நாள் சாதனையை அவர் கடந்து சென்றார்.
மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடர்ந்து நீண்ட நாட்கள் பிரதமராக இருந்த சாதனையையும் மோடி கடந்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்திரா காந்தி 4,078 நாட்கள் பிரதமராக இருந்ததாக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பட்டியலில் மோடி (4,399), நேரு (4,398), இந்திரா காந்தி (4,078), மன்மோகன் சிங் (3,657), வாஜ்பாய் (2,257) உள்ளிட்டோர் பதவி வகித்த நாட்கள் விவரமாக இடம் பெற்றுள்ளது.





