தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளை தொடங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு இடம் காலியாக உள்ளது. சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானது.
மேலும் பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அந்த நான்கு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, 5 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, திருப்பூர், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.





