ஜூன் 12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுவதையொட்டி முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து வளரவும், பள்ளிக்குச் சென்று கல்வி பயிலவும் உரிய இனிய காலம் என அவர் குறிப்பிட்டார். குடும்ப சூழ்நிலையால் சில குழந்தைகள் வேலைக்கு செல்லும் நிலை உருவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த தொழிலிலும் குழந்தைகளை பணியமர்த்தக் கூடாது என முதல்வர் வலியுறுத்தினார். குழந்தைகளை இத்தகைய சுரண்டலிலிருந்து காக்கவும், அவர்கள் கல்வியைத் தொடரவும் நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் கூறினார்.




