மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுக்குப் பிறகு, மக்களோடு மக்களாக பக்தர்களின் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.
மேலும், கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளின் முன்னேற்றத்தையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பணிகளில் சுமார் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள 10 சதவீத பணிகளும் விரைவில் நிறைவு செய்து திட்டமிட்ட தேதி, நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.





