சென்னை: பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்; 15 நாளுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் 5 நாளுக்குள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்முறை முடித்து முடிவு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பட்டா மாறுதல் பணிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பட்டா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க துறையின் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாகவும், உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்புடன் பணிகளை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.