நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 10 கோடிக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெயை திறந்த சந்தைக்கு கொண்டு சென்றதாக, ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா–ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று மாதங்களுக்கு மேலாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.
இதையடுத்து கடந்த மாத தொடக்கத்தில், வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் “புராஜெக்ட் பிரீடம்” என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும், ஆனால் அது ஒரே நாளில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதாகவும் குறிப்பிடப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு வழங்கும் ரகசிய பணியை ராணுவத்துக்கு உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம் ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணெயை சுமார் 200 கப்பல்கள் மூலம் கொண்டு வந்ததாகவும், ஈரானுக்கு ரேடார் வசதி இல்லாததால் இதை கண்டறிய முடியவில்லை எனவும் அவர் கூறியதாக செய்தி தெரிவிக்கிறது.





