வாஷிங்டன்: ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை அமெரிக்கா கைப்பற்றும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் வெனிசுலாவில் நடந்ததாக கூறும் நடவடிக்கையுடன் ஒப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படும் சூழலில், ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் கடற்படை, விமானப்படை மற்றும் ரேடார் திறன்களை இழந்துள்ளதாக கூறி, கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கார்க் தீவு மற்றும் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை கைப்பற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும், வெனிசுலாவில் செய்தது போல ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையையும் கைப்பற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





