டில்லி பயணத்தை நிறைவு செய்த பின்னர், மங்களூரு வழியாக உடுப்பி மாவட்டம் கொல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு முதல்வர் விஜய் சென்றார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் அம்மனை தரிசனம் செய்து, சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார்.
காணிக்கையாக, 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட வெள்ளி வாளை அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கோவில் தரப்பு தெரிவித்தது.
முதல்வர் வருகையை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. கொல்லூர் மூகாம்பிகை கோவில் தினமும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் தரிசனம் செய்யும் முக்கிய தலமாகும்.





