கோவையில் நடந்த கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அண்ணாமலை, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நம்மையோ நமது வேலைவாய்ப்பையோ அழிக்காது என்று கூறினார்.
எங்கு சென்றாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார். கம்ப்யூட்டர் வாழ்க்கையை மாற்றியதுபோல், ஏஐயும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றார்.
தொழில்நுட்ப மாற்றங்கள் சில சிக்கல்களையும் உருவாக்கலாம்; அதிலிருந்து மீண்டு வர கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏஐ வேலைகளை பறிக்கும் என்ற கருத்தை தாம் நம்பவில்லை; ஆனால் அதை பயன்படுத்தத் தெரியாத மாணவர்களுக்கு அது பிரச்னையாக மாறலாம் என எச்சரித்தார்.
ஏஐ வாழ்க்கையையும் வேலை உலகையும் மாற்றும் காலகட்டத்தில் தான் மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள்; எனவே இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ரிஸ்க் எடுக்கவும், பயணம் செய்யவும், குழுவாக இணைந்து பெரிய திட்டங்களை அமைத்து சவால்களை தீர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.
பொறியாளராக பட்டம் பெறுவது ஒரு மைல்கல் மட்டுமே; நல்ல மனிதராக வளர இன்னும் தூரம் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். சிறிய சிந்தனைகளில் வாழ்க்கையை தொலைக்காமல் பெரிய அளவில் சிந்திக்கவும், எளிமையுடனும் அடக்கத்துடனும் இருக்கவும், புதிய விஷயங்களை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளவும் அவர் வலியுறுத்தினார். பெற்றோருக்கு தேவைப்படும் போது எங்கிருந்தாலும் ஓடி வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





