சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய (TNEB) தலைமையகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளது.

திருடப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த மின்மாற்றிகள் கொள்முதல் ஊழல் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.