புதுடில்லியில் இருந்து வெளியான தகவலின்படி, இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமை தளபதி உபேந்திர திவேதி ஜூன் 30 அன்று ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குப் பின் தீரஜ் சேத் பொறுப்பேற்கிறார். தற்போது அவர் ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான தீரஜ் சேத், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். 40 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

அவர் ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்க உள்ளார்.