காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் பேசும் ஒவ்வொரு முறையும் குறை கூறுவதற்காக மட்டுமே பேசுகிறார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண்டுக்கு ஆண்டு இந்தியா அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறி வருவதாகவும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் மீதான அரசின் கவனத்தை ராகுல் கவனிக்கத் தவறுகிறார் என்றும் கூறினார்.

இந்தியாவின் சாதனைகளையும், இந்திய மக்களின் சாதனைகளையும் குறைத்து மதிப்பிடும் வகையில் அவர் பேசுவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேற்காசியப் போர்சூழலை குறிப்பிட்ட அவர், பல சவால்கள் இருந்தபோதும் பிரதமர் நரேந்திர மோடி தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ததாகவும், விநியோகத்தில் எந்தத் தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு முன், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெங்களூருவில் நடைபெற்ற மாஸ் கிளினீங் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று சுத்தம் செய்தார்.