அணு ஆயுத நாடு என்ற தன் அந்தஸ்தை ஒருபோதும் இழக்க முடியாது என்று வடகொரியா தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு அளித்த பதிலடியாகவும் கூறப்படுகிறது.
ஈரானைத் தொடர்ந்து அமெரிக்கா வடகொரியா பக்கம் கவனம் திருப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வடகொரியாவை அணு ஆயுதங்களை குறைக்குமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த சூழலில், ஜூன் 11 அன்று நடைபெற்ற இருதரப்பு அணுசக்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் தென் கொரியாவும் அமெரிக்காவும் மீண்டும் அதையே வலியுறுத்தின.
இதற்கு பதிலாக, வடகொரியாவின் நிலைப்பாட்டை கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், போரில் ஈடுபட்டுள்ள மற்றொரு தரப்பின் அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து பேசுவது நியாயமற்றது என்றும், வெளிப்புற அழுத்தங்களால் வடகொரியாவின் அணு ஆயுத நாடு அந்தஸ்தை மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.





