வட கடலோர தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஜூன் 14 அன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கைப்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது; தர்மபுரி மாவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.