தமிழகத்தில் வெள்ளி விலை நேற்று கணிசமாக உயர்ந்து, கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ரூ.2.70 லட்சத்தில் விற்பனையானது.

முந்தைய நாளில் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ரூ.13,800-க்கும், சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனையானது. அப்போது வெள்ளி கிராம் ரூ.265 என இருந்தது.

நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,860 ஆக விற்பனையானது. சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,10,880 ஆக இருந்தது.

வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270 ஆக விற்பனையானது. இதன் மூலம் கிலோ விலை ரூ.5,000 உயர்ந்து ரூ.2.70 லட்சமாகியது.