கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியா, சீனா தவிர பல வளரும் நாடுகளில் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி ஏற்படாத நிலையில், அவற்றுக்கு ‘தொலைந்த தசாப்தம்’ ஆக மாறும் அபாயம் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலக வங்கியின் குளோபல் எகனாமிக் பிராஸ்பெக்ட்ஸ் – ஜூன் 2026 அறிக்கையில், பெருந்தொற்றுக்குப் பின் வளரும் நாடுகளின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் சுமை அதிகரித்ததும், தொழில் முதலீடுகள் சரிந்ததும் முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ச்சியான உலகளாவிய நெருக்கடிகளால் வளர்ந்த நாடுகளுடன் உள்ள வருமான இடைவெளியை குறைப்பதில் வளரும் நாடுகள் பின்தங்கியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

பல ஏழை நாடுகள் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை; அதே நேரத்தில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் வறுமை தீவிரமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் இந்தர்மித் கில் கூறியதன்படி, இந்தியா மற்றும் சீனாவைத் தவிர பிற வளரும் நாடுகளின் தனிநபர் வருமானம், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை 2028க்கு பிறகே மீண்டும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.