ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது எனக் கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியான இந்த நான்கு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பணிகளைத் தொடங்கியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், தகுதி நீக்க நடவடிக்கைக்கு உட்பட்டிருந்த 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதம் என வாதிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





