அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டியதையடுத்து, மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் தணிந்ததாகக் கூறப்படுவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது.

அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதால், உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படலாம் என்ற நம்பிக்கை சந்தையில் உருவானது.

இதன் பின்னணியில், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் 4%க்கும் அதிகமாக சரிந்து, ஒரு பேரல் $84-க்கும் கீழே சென்றது. விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பே விலை சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%க்கும் அதிகத்தை இறக்குமதி செய்வதால், இந்த விலை சரிவு அந்நிய செலாவணியைச் சேமிக்கவும், பணவீக்க அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடும் என தகவல் தெரிவிக்கிறது.