டெல் அவிவ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு பெற்றதாக கூறப்படும் ஒப்பந்தம் இஸ்ரேலை கட்டுப்படுத்தாது என, இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இடமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஒரு சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.
செய்தி விவரப்படி, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதில் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுபோன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பென் கிவிர் தனது அறிக்கையில், இஸ்ரேலின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் சர்வதேச அழுத்தங்களுக்கு ஒவ்வொரு முறையும் இணங்கியபோது அதற்கான விலையை “வட்டியுடன்” செலுத்தியதாக கூறினார். ஓஸ்லோ ஒப்பந்தம், 2006 லெபனான் ஒப்பந்தம் மற்றும் காசா தொடர்பான கட்டுப்பாட்டு காலம் போன்றவற்றை அவர் எடுத்துக்காட்டினார்.
மேலும், லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் ஒவ்வொரு ட்ரோன், ஆளில்லா விமானம் அல்லது ஏவுகணையும், பெய்ரூட்டின் தஹியா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என எச்சரித்தார். அதே நேரத்தில், அமெரிக்காவை நேசிப்பதாகவும் டிரம்புக்கு நன்றி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





