உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் பெரிய அதிர்ச்சியாக, குரூப் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயினை கேப்வெர்டே 0-0 என சமன் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஸ்பெயின் எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டம் முழுவதும் 74% நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்த ஸ்பெயின், கேப்வெர்டே கோல் பகுதியை தொடர்ந்து அழுத்தியது. ஆனால் கேப்வெர்டே அணியின் ஒழுங்கான தற்காப்பு அமைப்பு ஸ்பெயினின் முயற்சிகளை கட்டுப்படுத்தியது.
கேப்வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா (40) ஆட்டத்தின் நாயகனாக இருந்தார். முதல் பாதியில் பெரான் டோரஸ், அய்மெரிக் லபோர்ட், ஒயர்சாபல் ஆகியோரின் கோல் முயற்சிகளை அவர் சிறப்பாகத் தடுத்ததால் இடைவேளைக்கு 0-0 என சமநிலையில் சென்றது.
இரண்டாம் பாதியிலும் ஸ்பெயின் தாக்குதல் தொடர்ந்தது; இளம் நட்சத்திரம் லமின் யமால் எடுத்த முயற்சிகளையும் வோசின்ஹா தடுத்து நிறுத்தினார். இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 0-0 என முடிந்தது; இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.





