புதுடில்லி: சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு உலகம் தயாராகி வரும் நிலையில், இளைஞர்கள் யோகாவை ஆர்வத்துடன் விரும்பி கற்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஸ்லோவாக்கியாவின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியுடன் இணைந்து, ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய யோகா நிகழ்வை பார்த்து மகிழ்ந்ததாகவும், அதற்கான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகவும் அவர் கூறினார்.
சர்வதேச யோகா தினத்தை உலகம் எதிர்நோக்கும் தருணத்தில், இளைஞர்களிடையே யோகாவுக்கான ஈடுபாடு அதிகரிப்பது உற்சாகமளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், நல்வாழ்வை நோக்கி யோகா மக்களை ஒன்றிணைப்பதை காண்பதும் மகிழ்ச்சி தருவதாக அவர் தெரிவித்தார்.





