மக்களின் உயிரும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ள சூழலில், தாம் 6 மாதம் மௌனமாக இருக்க வேண்டுமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

தன் அறிக்கையில், “சிங்கப்பெண் படை” அமைத்ததாக முதல்வர் கூறியதை குறிப்பிட்ட அவர், இச்செய்திகளைப் பார்த்த பிறகாவது பிஞ்சுகளை இழந்து கதறும் பெற்றோர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா என்று கேட்டார்.

மேலும், மக்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்றும், குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கம் கோரினார்.

முன்பு சவாலும் சவடாலும் விட்டதாகக் கூறி, முதல்வர் எப்போது “சைலன்ட் மோடு” நிலையில் இருந்து வெளியே வருவார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் திமுக பெரிய போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்றும் ஸ்டாலின் எச்சரித்தார்.