தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் மரியவில்சன் அந்த அறிக்கையை வெளியிடுகிறார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய், மாநிலத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, இன்று மாலை இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





