பிரான்ஸின் லெ பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்றுள்ளார்.

மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை அதிபர் மேக்ரான் வரவேற்றார். தொடர்ந்து உலகத் தலைவர்களுடன் இணைந்து அவர் அதிகாரப்பூர்வ குழுப் புகைப்படத்தில் கலந்து கொண்டார்.

அந்த குழுப் புகைப்படத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெர்மன் பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர், கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லூலா டா சில்வா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

“புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி, சர்வதேச ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பின் கீழ் நடைபெறும் அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.