ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடையேயான குறுகிய உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

பிரான்சின் ஈவியன் நகரில் நடைபெற்ற குழு புகைப்பட நிகழ்வின்போது மெலோனி, மோடியை சந்தித்து மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். அதற்கு மோடி ‘இன்ஸ்டாகிராம்’ என பேசத் தொடங்கியதும், மெலோனி புன்னகையுடன் உலகளவில் இன்ஸ்டாகிராமில் “பேமஸ் கபிள்” நாம்தான் என்று நகைச்சுவையாக கூறினார்.

அந்த கருத்து மைக்கில் பதிவான நிலையில், அதற்கான வீடியோ வெளியாகி தற்போது பரவலாக பகிரப்படுகிறது.

மோடி–மெலோனி சந்திப்புகள் தொடர்பான வீடியோக்கள் முன்பும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. கடந்த மாதம் மோடி இத்தாலி சென்றபோது, இருவரும் காரில் பயணித்ததும் உணவருந்தியதும் உள்ளிட்ட காட்சிகள் பரவலாக பகிரப்பட்டதுடன், ‘மெலோடி’ என்ற பெயரில் சாக்லேட் வழங்கியது பற்றியும் பேசப்பட்டது.