சென்னையில் செயல்படும் தமிழக தீ ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் பதவியிலிருந்து விலகி வரும் நிலையில் இந்த ராஜினாமாவும் இடம்பெற்றுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், ஓய்வு பெறுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தீ ஆணையம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஆணைய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

தகவலின்படி, ஆணைய உறுப்பினர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்ட நிலையில், இன்று சங்கர் ஜிவாலும் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.